யொஹானியின் “மணிக்கே மகே ஹித்தே”பாடல் U Tube இலிருந்து நீக்கம்

Keerthi
3 years ago
யொஹானியின் “மணிக்கே மகே ஹித்தே”பாடல் U Tube இலிருந்து நீக்கம்

உரிமைப் பிரச்சினை காரணமாக u tube இல் இருந்து  “மணிக்கே மகே ஹித்தே” (மணிக்கே எனது மனதில்) பாடல் நீக்கப்பட்டது.
யொஹானி திலோகா டி சில்வா பாடிய ‘மெனிகே மகே ஹிதே’ பாடல் நேற்று  (19/10) காலை முதல் u tube இல் செயலற்ற நிலையில் உள்ளது.
அத்துடன் இந்தப் பாடல் இந்தியாவின் மிகப்பெரிய இசை நிறுவனங்களில் ஒன்றான T Series இதற்குரிய பதிப்புரிமையைப் பெற்றிருந்தது .
யோகானி டி சில்வா பாடிய இந்தப் பாடல் சமீபத்தில் t-Series இன் உரிமத்துக்கு மாற்றப்பட்டிருந்தது.
யோகானியின் அலைவரிசையிலிருந்து இருந்த இந்தப் பாடலை அதன் சட்ட அந்தஸ்து காரணமாக செயலிழக்கச் செய்ய நிறுவனம் நடவடிக்கை எடுத்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், அந்த பாடலை மீண்டும் செயல்படுத்த நிறுவனம் நடவடிக்கை எடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
யொஹானியின் பாடலை u tube இல்  160 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர்.
அவர் சமீபத்தில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவியின்  முன்னிலையில் இந்தப் பாடலைப் பாடியதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!